திருட சென்ற இடத்தில் இவர் செய்த வேலையை பாருங்க... வீடியோ உள்ளே!

திங்கள், 19 பிப்ரவரி 2018 (15:32 IST)
சீனாவில் கட்டிடத்தில் திருட முயன்ற இரு திருடர்களில் வீடியோவை அந்நாட்டு போலீஸார் நகைச்சுவை வீடியோவாக வெளியிட்டு இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களும் இதை நகைச்சுவையாகவே பார்க்கின்றனர். 
சீனாவின் ஷாங்காய் நகர முக்கிய வீதியில் இரவில் கட்டிடம் ஒன்றில் நுழைந்து இரு திருடர்கள் திருட முயற்சித்துள்ளனர். அதில் ஒருவர் கல்லை எடுத்து அந்தக் கட்டிடத்தின் மீது வீசுகிறார். 

அதனை தொடர்ந்து அவருக்கு பின்னால் வந்த மற்றொரு திருடன் தன் பங்கிற்கு கல்லை எறிகிறார். ஆனால், அந்த கல் அவனது கூட்டாளி மீது விழுகிறது. இதனால் அவர் நிலை தடுமாறி கீழே விழுகிறார். 
 
தனது கூட்டாளி மயங்கி விழுந்ததைக் கண்டு பதற்றம் அடைந்த மற்றொருவர் அவரை தூக்கிக் கொண்டு அங்கிருந்து வேகமாக நகர்கிறார். இந்த காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 
 
இதனை ஷாங்காய் போலீஸார் பொதுமக்கள் பார்வைக்காக காமெடி வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இந்த காட்சி சீன சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ....

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்