பாகிஸ்தானில் அதிகாரப்பூர்வமான சீன மொழி?

வெள்ளி, 2 மார்ச் 2018 (15:44 IST)
சீன மொழியான மாண்டரின் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ மொழியாக  அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இது சீனா - பாகிஸ்தான் இடையே நல்ல உறவை தொடர உதவும் எனவும் கூறப்பட்டது. 
 
இந்த செய்தியை பாகிஸ்தான் தலைவர்கள் சிலரும் தங்களது வலைதளங்களில் பதிவிட்டனர். ஆனால், இந்த செய்தி தவரானது என பாகிஸ்தான் செனட் சபை விளக்கம் அளித்துள்ளது. 
 
பாகிஸ்தான் நாடாளுமன்றம் தனது நாட்டில் சீன மொழியை ஒரு பாடமாக கற்பிப்பதற்கு பரிந்துரை செய்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளதே தவிர, சீன மொழியை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ மொழியாக மாற்றுவதற்கு அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லையாம். 
 
இந்த செய்தி பாகிஸ்தானில் மட்டும் பரவையது அல்லாமல் இந்தியா, சீனா ஊடங்களும் பரவியதால் பாகிஸ்தான் செனட் சபை தானாக முன்வந்து இது போலியான தகவல் என விளக்கம் அளித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்