பிரதமர் இல்லத்தில் தங்க மாட்டேன் - அதிரடி காட்டும் இம்ரான் கான்

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (12:13 IST)
பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்கான், பிரதமர் இல்லத்தில் தங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமராக கடந்த 18 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவர்க்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
 
இந்நிலையில் அவர் நாட்டு மக்களிடம் தொலைகாட்சி வாயிலாக பேசினார்.
அதில் பேசிய அவர் நாட்டு மக்களுக்காக செல்விடுவதை விட, நாட்டை ஆள்பவர்களுக்கே அதிகம் செலவழிக்கப்படுகிறது. கடந்த ஆட்சிக் காலங்களில் பிரதமர்களின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்துக்கு ரூ.65 கோடி செலவிடப்பட்டுள்ளது. சபாநாயகரின் செலவுக்கு மட்டும் பட்ஜெட்டில் ரூ.16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
ஆகவே செலவுகளை கட்டுப்படுத்த நான் பிரதமர் இல்லத்தில் தங்கப் போவதில்லை. அதற்கு பதிலாக இஸ்லாமாபாத்தில் ராணுவ செயலாளர் வீட்டில் தங்க இருக்கிறேன். பிரதமர் இல்லம் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக மாற்றப்படும். பிரதமர் அலுவலகத்தில் உள்ள 33 புல்லட் புரூப் கார்கள் அனைத்தும் ஏலம் விடப்படும். அந்த பணம் மக்களின் சேவைக்காக பயன்படுத்தப்படும்.
 
நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல அனைத்து விதமான அநாவசிய செலவுகளை குறைத்து, மக்களின் நலனுக்காக பாடுபடுவேன் என உறுதி அளிப்பதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்