கரூரில் ஆற்று வெள்ளத்தில் தவித்த மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு, நிவாரணப்பொருட்களான பாய், பெட்ஷீட்களை அம்மா மக்கள் முன்னேற்றக்கழக கட்சியினர் கொடுத்து உதவியுள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் காவிரி ஆற்றின் வெள்ள நீர் புகுந்ததால், அங்கிருந்த மக்கள் அரசு சார்பில் ஒரு தனியார் மஹாலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், ஒரு சிலர் அப்பகுதியில் உதவியில்லாமல் தவித்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில், கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியின் சார்பில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட்ட 60 குடும்பங்கள், சுமார் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பாய், பெட்ஷீட், துண்டுகள் மற்றும் உணவு வகைகள் வழங்கப்பட்டன.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் ஜெ பேரவை மாநில நிர்வாகி தாரணி சரவணன், கரூர் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார், கரூர் மாவட்ட ஜெ பேரவை செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கரன், மாநில எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகி ஆர்.எம்.தியாகராஜன், கரூர் நகர செயலாளர் கோல்டுஸ்பாட் ராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு அனைத்து மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சி குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் மாநில நிர்வாகி தாரணி சரவணன் கூறுகையில், தமிழக மக்களுக்கு நீட் தேர்விலிருந்து போக்குவரத்து வசதி உள்ளிட்ட ஏராளமான உதவிகளை டி.டி.வி தினகரன் செய்து வருவதாகவும், தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும், காக்கவும், மக்களை காக்கும் சக்தி படைத்தவர் டி.டி.வி தினகரன் தான் என்றும் தமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் அது டி.டி.வி தினகரனினால் தான் முடியும் என்றதோடு, விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்றும் சூளுரைத்தார்.