மரியா புயல் தாக்குதல்: 4600 பேர் உயிரிழப்பு?

Webdunia
புதன், 30 மே 2018 (11:43 IST)
உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கழைக்கழகம் நடத்திய ஆய்வில் கடந்த செப்டமபர் மாதம் போர்ட்டோ ரிகோ தீவில் ஏற்பட்ட மரியா புயலில் 4600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

 
 
அமெரிக்காவின் டெக்சாஸ், புளோரிடா மாகாணங்கள் மற்றும் கரீபிய கடலில் உள்ள தீவான போர்டோ ரிகாவை கடந்த ஆண்டு செப்டமபர் மாதம் மரியா என்னும் புயல் கடுமையாக தாக்கியது.  205 கி.மீ, வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் மரங்கள் மற்றும் குடியிருப்பு வீடுகள் சேதமடைந்தன. மேலும், அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த புயலால் 64 பேர் இறந்ததாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், 90 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட உயிர்சேதம் என்றும் தெரிவித்தனர்.
 
இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கழைக்கழகம் நடத்திய ஆய்வில் மரியா புயலால் 4600 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசு தரப்பில் தெரிவித்த உயிரிழப்பு சதவிதத்தை விட 70 மடங்கு அதிகமாகும். இந்த ஆய்வு அறிக்கையை கேட்டு பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
மரியா புயலால் ஏற்பட்ட புயல் சேதம் குறித்து ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகமும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வு அறிக்கை இன்னும் சில நாட்களில் வெளியடப்படும் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்