டிரம்ப் மற்றும் கிம் வரும் மாதம் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க இருக்கிறார்கள். இந்த சந்திப்பு தொடர்பாக அமெரிக்க, வடகொரிய வெளியுறவு துறை அதிகாரிகள் சிங்கப்பூரில் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மேலும், எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பதிலளித்தார். இதனால் டிரம்ப், மீண்டும் சிங்கப்பூர் சந்திப்பு நடைபெற வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது டிரம்ப் - கிம் சந்திப்பில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது என தென் கொரிய தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த சந்திப்புக்கு பின்னர் மூன்று நாட்டு தலைவர்களும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.