கேரளாவில் இருந்து வரும் பழங்களை இறக்குமதி செய்ய தடை - ஐக்கிய அரபு அமீரகம்

புதன், 30 மே 2018 (08:20 IST)
கேரளாவில் வேகமாக நிபா வைரஸ் பரவி வருவதால், கேரளாவில் இருந்து வரும் பழங்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரக அரசு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும் அரிய வகை வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. 
 
இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் கடுமையான மூளைகாய்ச்சலுக்கு ஆளாவார்கள். பின் உடல்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் நின்று மூளைச்சாவு ஏற்படுத்தும் அளவுக்கு இந்த நோய் கொடியது. இந்த நிபா வைரஸ் தாக்கி கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் ஒரு செவிலியர் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.  
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதால் கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து விதமான பழங்கள், காய்கறிகளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது என கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்