குழந்தையை காப்பாற்றிய நிஜ ஸ்பைடர்மேனுக்கு பிரான்ஸ் குடியுரிமை!

செவ்வாய், 29 மே 2018 (19:57 IST)
மலி நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஸ்பைடர்மேன் போல் செயல்பட்டு குழந்தையை காப்பற்றியதற்கு பரிசாக பிரான்ஸ் நாட்டு குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

 
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் ஒரு கட்டிடத்தில் கீழே விழுந்து நான்காம் மாடியில் தொங்கி கொண்டிருந்த குழந்தையை மலி நாட்டைச் சேர்ந்த வாலிபர் கசாமா காப்பற்றினார்.
 
இவர் ஸ்பைடர்மேன் போல் மாடியில் பால்கனிக்கு பால்கனி தாவி அந்த குழந்தையை காப்பாற்றினார். இதனால் இவருக்கு பாராட்டு மழை குவிந்தது. இவருக்கு பாரிஸ் நகர மேயர் விருந்து அளித்து பாராட்டினார்.
 
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரான்ஸ் அதிபரை சந்தித்தார். பிரான்ஸ் அதிபர் கசாமாவை பாராட்டியதுடன் அவருக்கு பரிசாக பிரான்ஸ் நாட்டு குடியுரிமையும், தீயணைப்பு துறையில் பணியும் வழங்கினார்,

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்