மாயன் நகரத்தை கண்டுபிடித்த கெளதமாலா நாட்டினர்...

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2018 (18:44 IST)
கெளதமாலா நாட்டை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கல் உலகின் மிகவும் தொன்மையான மாயன் நகரத்தை கண்டிபிடித்துள்ளனர். வடக்கு கெளதமாலா பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
அடர்ந்த வனப்பகுதியில் மறைந்திருக்கும் இந்த நகரை, ஆளில்லா குட்டி விமானத்தில் பிரத்யேக லேசர் கதிர்களை செலுத்தி ஆய்வாளர்கள் படம் பிடித்துள்ளனர். 
 
கடந்த 150 ஆண்டுகளாக மெற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகளில், தற்போது மாயன் நாகரிகம் குறித்து கிடைத்துள்ள இந்த ஆதாரம் மிகவும் அரிதானது என கருதப்படுகிறது. 
 
மேலும் இந்த ஆராய்ச்சியை முழுமையாக முடித்துவிட்டால், மாயன் மக்களின் இந்த தொன்மையான நகரம், மாயன் நாகரிகம் குறித்த வரலாற்றை மாற்றி அமைக்கும் என்று கருதப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்