81 வயதில் படித்து பட்டம் வென்ற மூதாட்டி

திங்கள், 5 பிப்ரவரி 2018 (11:02 IST)
படிப்பிற்கும் வயதிற்கும் சம்பந்தமில்லை என்பதை 81 வயதில் படித்து பட்டம் வென்ற மூதாட்டி நிரூபித்துள்ளார்.
இன்றைய இளம் தலைமுறையினர் பலர் படிப்பின் மீது ஆர்வம் கொள்ளாமல் தீய பழக்கத்திற்கு அடிமையாகி, தங்களது படிப்பையும் வாழ்க்கையையும் துலைத்து விட்டு நிற்கின்றனர். மறுமுனையில் நன்றாக படிக்கும் மாணவர்கள், தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் விரக்தியடைந்து தற்கொலை செய்யும் முடிவிற்கு தள்ளப்படுகின்றனர். இவர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக ஒரு மூதாட்டி செயல்பட்டுள்ளார்.
 
சீனாவைச் சேர்ந்த ஷியூமின்சூ என்ற 81 வயது மூதாட்டி, தனது 77 வது வயதில் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனம் மூலம்  இ-காமர்ஸ் படிப்பை தொடங்கினார். கடந்த 4 ஆண்டுகளாக தீவிர முயற்சியின் மூலம் படித்து பட்டம் பெற்றுள்ளார். ஷியூமின்சூ பட்டத்தை பல்கலைக் கழகத்திற்கு நேரில் சென்று  பெற்றுக் கொண்டார். படித்து பட்டம் பெற்றதன் மூலம் தனது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைத்து இருப்பதாகவும், தன்னம்பிக்கையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்