சுஷ்மா ஸ்வராஜ் நேபாள பயணம் திருப்பத்தை தருமா?

சனி, 3 பிப்ரவரி 2018 (07:39 IST)
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சீன ஆதரவாளரான ஷர்மா ஒலி வெற்றி பெற்று புதிய பிரதமராக விரைவில் பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில் ஷர்மா ஒலி, சீனா ஆதரவுள்ளவர் என்பதால் அவருடன் இணக்கமான உறவை மேம்படுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நேற்று நேபாள நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தார்.

முதலில்  நேபாள பிரதமர் ஷெர் பகதுர், ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி ஆகியோரை சந்தித்த பின்னர் பிரதமராக பதவியேற்க உள்ள ஷர்மா ஒலியையும் சுஷ்மா சந்தித்தார். இந்த சந்திப்பு முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பை சீனாவும் உற்று நோக்கி வருகிறது.

ஆனால் அதே நேரத்தில் சீனா, இந்தியா இரு நாடுகளிடமும் மிகவும் நெருக்கம் காட்டாமல் சற்று தள்ளி நிற்கவே நேபாளம் விரும்புவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்