தடைகளை மீறி வருமானம்: வடகொரியாவில் நடப்பது என்ன?

சனி, 3 பிப்ரவரி 2018 (15:21 IST)
வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் உலக நாடுகளை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் கடும் கோபத்திற்கு உள்ளது. இதனால் பல பொருளாதார தடைகள் வடகொரியா மீது விதிக்கப்பட்டது.
 
இருப்பினும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத பரிசோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இந்நிலையில், வடகொரியா தன் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையை மீறியுள்ளதாக ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது.
 
இது குறித்து ஐநா கூறியதாவது, வடகொரியா அதன் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மீறியுள்ளதாகவும், கடந்த வருடம் போலியான பாதைகள் மற்றும் தந்திரங்களை பயன்படுத்தி சுமார் 200 மில்லியன் டாலர்களை ஏற்றுமதியில் வருவாயாக ஈட்டியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. 
 
வடகொரியா மீது ஐநா 8 முறை பொருளாதார தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வடகொரியா தனது வருமானத்தை எவ்வாறு ஈடுசெய்து வருகிறது என்பதனை கண்காணிக்க ஐநா முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்