திருடர்கள் வழக்கமாக பொன், பொருளைத் தான் திருடுவார்கள், ஆனால் வழக்கத்திற்கு மாறாக சீனாவில் ஒரு வினோத திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.
சீனாவில் சாங்கேசு என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் வழியாக செல்லும் 800 மீட்டர் நீள ரோடு இரவோடு இரவாக திடீரென மாயமானது. விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், சம்மந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
திருடன் உபயோகித்த வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு போலீசார் ஷிகு என்ற நபரை கைது செய்தனர். விசாரணையில் திருடன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். திருடிய ரோட்டின் 500 டன் கான்கிரீட் கலவையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்றதாக அவன் தெரிவித்தான். அந்த திருடனை கைது செய்த போலீஸார், அவன் வேறெனென்ன குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கிறான் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.