பட்டாசு வெடிக்கலாம்.. காரை கொளுத்தியா கொண்டாடனும்? – 874 கார்களை கொளுத்தி புத்தாண்டு!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (08:36 IST)
பிரான்சில் புத்தாண்டு அன்று இளைஞர்கள் பலர் 800க்கும் அதிகமான கார்களை கொளுத்தி புத்தாண்டு கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய வருடமான 2022ம் ஆண்டு பிறந்ததை நேற்று முன்தினம் உலகம் முழுவதும் மக்கள் கோலகலமாக கொண்டாடினர். பல நாடுகளில் கொரோனா காரணமாக புத்தாண்டு கொண்டாட தடை உள்ள நிலையில் மக்கள் வீடுகளில் அமைதியான முறையில் கொண்டாடினர். பல பகுதிகளில் பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்டது.

பிரான்சில் புத்தாண்டை கார்களை கொளுத்தி கொண்டாடுவதை புதிய ட்ரெண்டாக அந்நாட்டு இளைஞர்கள் உருவாக்கி வருகின்றனர். கார்களை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளபோதும் இது தொடர்கிறது. புத்தாண்டு அன்று பிரான்ஸின் பல பகுதிகளில் சுமார் 874 கார்களை கொளுத்தி புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது குறைவு என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்