இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்.. போர் ஆரம்பித்துவிட்டதா?

Siva
புதன், 2 அக்டோபர் 2024 (07:11 IST)
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவிய நிலையில், நேற்று இரவு இஸ்ரேல் மீது 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் வீசி தாக்குதல் நடத்தியதாகவும், ஜெருசலேம் நகரில் இடைவிடாது ஒலித்த சைரன் காரணமாக பொதுமக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும், "போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்போம்" என அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில், போர் ஆரம்பித்து விட்டதாக கருதப்படுகிறது.

இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம் உருவாகியுள்ளது. உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், "ஈரான் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம்" என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். "எத்தகைய தாக்குதலையும் வலிமையாக எதிர்கொள்வோம்" என்று ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதிலளித்துள்ளார்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்