ஒரு மணி நேரத்தில் சுமார் 140 கோடி டாலர்கள் வருமானம் ஈட்டிய எலான் மஸ்க்

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (18:13 IST)
உலகில் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க்  ஒரு மணி நேரத்தில் சுமார் 140 கோடி டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு சுமார் ரூ. 22.5 லட்சம் கோடி ஆகும்.

எனவே அவர் அமேசான் நிறுவனர் ஜெப்பகாசை முந்தி உலகில்  நம்பர் 1 கோடீஸ்வரர் என்ற சாதனையைப் படைத் துள்ளார்.  2021 ஆம் ஆண்டில் மட்டும் எலான் மஸ்க் 1 லட்சம் கோடி டாலர்களாக அதிகரித்துள்ளதாக (ரூ. 9 லட்சம் கோடி சொத்து) கூறப்படுகிறது.

இந்நிலையில், உலகக் பணக்காரர்கள் பட்டியலில் எலான மஸ்க் முதலிடம் பிடித்துள்ள நிலையில்,  நேற்று மட்டும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் கணிசமாக பதிவு செய்தன. டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 13.5 % சதவீதம் அதிகரித்து ஒரு பங்கின் விலை 1,199 .78 டாலர்களாக அதிகரித்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்