ஒழுங்கா வேலை செய்யலைனா கம்பெனி மூடல்தான்..! – எலான் மஸ்க் எச்சரிக்கை!

வெள்ளி, 3 டிசம்பர் 2021 (15:53 IST)
இரவு, பகல் பாராமல் ஊழியர்கள் உழைக்காவிட்டால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை மூட வேண்டி வரும் என அதன் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதற்கான திட்டத்தில் தீவிரமாக செயலாற்றி வருகிறது. இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் விண்கலம் சோதனை அடிக்கடி தோல்வியை சந்தித்து வந்த நிலையில், ராப்டர் ராக்கெட் இன்ஜின் தயாரிப்பு பணியும் பின்தங்கியுள்ளது.

இந்த ராக்கெட் என்ஜின் தயாரிப்பிற்கான பொறுப்பாளர்கள் நீக்கப்பட்ட பிறகு நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. இதுகுறித்து ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ள எலான் மஸ்க் இரவு பகல் பாராமல் உழைத்து என்ஜின் தயாரிப்பு பணியை முடிக்காவிட்டால் நிறுவனத்தை மூட வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்