உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரானார் எலான் மஸ்க் !

சனி, 1 ஜனவரி 2022 (22:59 IST)
அமேசான் நிறுவனர் ஜெப்பகாசை முந்தி உலகில்  நம்பர் 1 கோடீஸ்வரர் என்ற சாதனையைப் படைத் துள்ளார் எலான் மஸ்க்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டடு சுமார் ரூ. 22.5 லட்சம் கோடி ஆகும்.

எனவே அவர் அமேசான் நிறுவனர் ஜெப்பகாசை முந்தி உலகில்  நம்பர் 1 கோடீஸ்வரர் என்ற சாதனையைப் படைத் துள்ளார்.  2021 ஆம் ஆண்டில் மட்டும் எலான் மஸ்க் ரூ. 9 லட்சம் கோடி சொத்து சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் , அமேசான் நிறுவனர் ரூ.30,000 கோடி கடந்தாண்டு வருமானம் ஈட்டியுள்ளார். மேலும் அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.15 லட்சம் கோடியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்