ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளிடையே போர் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், 2 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது.
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக் கூடாது என்று அதன் அண்டை நாடான ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போர் தொடுத்தது.
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள் நிதியுதவி அளித்து வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.
இதில் இரு நாடுகள் தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்களும், பொதுமக்களும், குழந்தைகளும் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளிடையே போர் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், 2 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது.
ரஷ்யா உக்ரைன் போரின் போது, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட உக்ரைன் ராணுவத்திற்கு செயற்கைக் கோள் தகவல்தொடர்புகளை எலான் மஸ்க் வழங்கினார். அவரது செயலுக்குப் பாராட்டுகள் குவிந்தது.
எனவே 2024 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை எக்ஸ் நிறுவன அதிபரும் டெஸ்லா சிஇஓவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க்-க்கு வழங்க வேண்டும் என நார்வே எம்.பி., மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார்.