நிலநடுக்கம் : உயிர் பயத்தில் 10 வது மாடியில் இருந்து குதித்த பெண் பலி

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (19:42 IST)
கொலம்பியாவின் பொகட்டோ பகுதியில் நேற்று நில நடுக்கம் ஏற்பட்ட நிலையில், பெண் ஒருவர் 10 வது மாடியில் இருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கொலம்பியாவின் பொகட்டோ என்ற பகுதியில்  நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த திடீர் நடு நடுக்கத்தால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்தனர்.

பொதுமக்கள் அனைவரும்   என்ன நடக்குமோ என்ற பீதியுடன் தான் வீதியில் தங்கள் குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பெண் ஒருவர்  உயிர் பயத்தில், 10 வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.

இதில், கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இதுபற்றித் தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு தீயணைப்புப் படையினர் வந்தனர். ஆனால், அப்பெண் உயிரிழந்துவிட்டார்.

பின், நீண்ட நேரம் கழித்து பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு கொலம்பியாவில் ஏற்பட்ட  நில நடுக்கத்தில் 11 பேர் உயிரிழந்த சோகமான சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்