அமேசான் காட்டிற்குள் விமான விபத்து: 17 நாட்களுக்குப் பின் 4 சிறுவர்கள் மீட்பு…

வியாழன், 18 மே 2023 (18:35 IST)
பிரேசில் நாட்டில் அமைந்துள்ள அமேசான் காட்டிற்குள் விமானம் விழுந்து விபத்தில் சிக்கியது.  இந்த விபத்து நடந்த பகுதியில் மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இதில்,  17 நாட்களுக்குப் பின் இன்று ஒரு 4 மாத கைக்குழந்தை உள்ளிட்ட  3 சிறுவர்களை உயிருடன் மீட்டுள்ளனர்.

பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது அமேசான் காடு. உலகில் நுரையீரல் என்று அழைக்கப்படும் இது மழைக்காடு ஆகும்.

இந்த நிலையில், கடந்த மாதம் 1 ஆம் தேதி,  கொலம்பியாவில் அமேசான் காட்டுப்பகுதியில் இருந்து ஒரு தம்பதி தங்களின் 4 மாதக் கைக்குழந்தை உள்ளிட்ட 4 குழந்தைகளுடன் ஹெலிகாப்டரில் சன் ஜொஷி டி கவ்ரி என்ற நகருக்கு  சென்றுள்ளனர்.

அப்போது அமேசான் அடர்வனப்பகுதியில் சென்றபோது, ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில்  விமானி, தம்பதி என 3 பேர் உயிரிழந்தனர்.

இவ்விபத்தில், 4 வயது கைக்குழந்தை உள்ளிட்ட 4 குழந்தைகள் உயிர்பிழைத்தனர். ஆனால், அடர்ந்த வனப்பகுதியில் இவர் சிக்கியதால், இவர்களை மீட்க  மீட்புக்குழுவினர்களுடன்  தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். இதையடுத்து 100 ராணுவ வீரர்கள் இத்தேடுதலில் ஈடுபட்டனர்.

இந்த னிலையில், 17 நாட்கள் தேடுதலுக்குப் பின், இன்று பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 4 சிறுவர்களை மீட்புப்படையினர் உயிருடன்  மீட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்