தைவான் நாட்டை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் தனக்குத்தானே ஆண்கள் செய்யும் கருத்தடை அறுவை சிகிச்சையான வாசக்டோமி என்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டு இது குறித்த வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோவை 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வை பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கான கருத்தடை சிகிச்சை இருப்பது போலவே ஆண்களுக்கு வாசக்டோமி என்ற கருத்தடை சிகிச்சை உள்ளது. மூன்று குழந்தைகளுக்கு தந்தையான தைவான் நாட்டை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர், தன்னுடைய மனைவி மேலும் குழந்தைகள் பெறுவதை விரும்பவில்லை என்றும் அதே நேரத்தில் மனைவிக்கு கருத்தடை செய்யவும் விரும்பவில்லை என்றும் இதனால் தான் ஆண்களின் கருத்தடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எனக்கு நானே வாசக்டோமி என்ற கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இந்த அறுவை சிகிச்சை பதினைந்து நிமிடங்கள் மட்டுமே நடக்கும் என்றும் ஆனால் எனக்கு நானே அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் ஒரு மணி நேரம் ஆகியதாகவும் இது ஒரு விசித்திரமான அனுபவமாக தனக்கு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் சிலர் அவரை பாராட்டியும் பலர் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.