உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவரது சிறுநீரகம் திருடப்பட்டதாகவும், இது குறித்து டாக்டர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு, உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட் என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அந்த மருத்துவமனையில் அவரது உடல் நிலை சரியாகாததால், வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் மாற்றப்பட்ட மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த போது, அவரது இடது சிறுநீரகம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. ஆனால் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை, அதை மறுத்ததோடு, இரண்டு சிறுநீரகமும் இருப்பதாக பொய்யான ஆவணங்களை கூறினார்.
இதையடுத்து, அந்த பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதன் பேரில், மருத்துவமனை இயக்குனர் மற்றும் அறுவை சிகிச்சை செய்த டாக்டர் உள்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.