எரிநட்சத்திரத்தில் வைரம்: 10 வருடங்களுக்கு பின் கண்டுபிடிப்பு!

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (12:59 IST)
சூடானில் கார்ட்டோம் பல்கலைக்கழக மாணவர்கள் எரிநட்சத்திரம் மீதான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது 10 ஆண்டுகளுக்கு முன்னர் விழுந்த எரிக்கல்லில் வைரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சூடானில் இருக்கும் நுபியன் பாலைவனத்தில் இந்த நட்சத்திரம் விழுந்தது. இதை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சூடானில் இருக்கும் கார்ட்டோம் பல்கலைக்கழக மாணவர்கள் அரசிடம் இருந்து வாங்கி ஆராய்ச்சி செய்தார்கள்.
 
இந்த நட்சத்திரத்தை ஆராய்ச்சி செய்ததில் இருந்து பல முக்கியமான தகவல்கள் வெளியே வந்துள்ளது. மனிதர்கள் எப்படி உருவானார்கள் என்பது கூட இந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுகின்றனர். 
 
இந்த நட்சத்திரத்திற்கு ஆல்மஹாட்டா சிட்டா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆராய்ச்சியின் படி இதில் வைரம் நிரம்பி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரத்தை போல தூய்மையான வைரம் இதுவரையில்லை என குஊரப்படுகிறது. 
 
இந்த வைரம் பூமி தோன்றும் முன்பே உருவாகி இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்