சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் வருமான வரித்துறையினர் மொத்தம் 187 இடங்களில் நடத்திய சோதனை நேற்று முன்தினம் மாலைதான் முடிவிற்கு வந்தது. இதில், மூட்டைக் கணக்கில் ஆவணங்களும், கிலோ கணக்கில் தங்க மற்றும் வைர நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளனர். மேலும், 60க்கும் அதிகமான போலி நிறுவனங்களை நடத்தி கோடிக்கனக்கில் பணம் குவித்து, தமிழகமெங்கும் பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.