பெண் வேடத்தில் இருப்பது அனிருத்தா? வைரலாகும் புகைப்படம்

வியாழன், 22 மார்ச் 2018 (17:45 IST)
இசையமைப்பாளர் அனிருத் பெண் வேடத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில், தனுஷ் – ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடித்த ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதன்பிறகு ஏகப்பட்ட தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத், தற்போது தெலுங்குப் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இசையமைப்பதோடு மட்டுமின்றி, நடிகராக சில படங்கள் மற்றும் ஆல்பங்களில் தலைகாட்டியிருக்கிறார்.




இந்நிலையில், அனிருத் பெண் வேடத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் அனிருத்தா அல்லது அவரைப் போன்ற முகச்சாயல் கொண்ட ஒருவரா என்பது தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்