போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர் மீது பைக்கை ஏற்றிய போலீசார் ...! வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (18:22 IST)
போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு இளைஞர் மீது போலீஸார் இருசக்கர வாகனத்தை ஏற்றித் தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சிலி நாட்டில் உள்ள மக்கள், பொருளாதாரத்தில் அனைவருக்கும் சமமான தன்மையை அளிக்க வேண்டுமென போராடி  அரசிடம் வருகின்றனர்.
 
இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு இளைஞர் மீது போலீஸார் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.அப்போது அந்த இளைஞர் கீழே விழுந்தார். அவரைக் கை தூக்கிவிட்டு உதவாமல் அவர் மீது பைக்கை கொண்டு மோதுவதும், பைக்கை அவர் மீது ஏற்றுவதுமாக இரக்கமின்றி நடந்து கொண்டனர்.

அப்போது, ஒரு சிறுமி வந்து இளைஞரை போலீஸாரிடம் இருந்து காப்பாற்றி அவரை தப்பி ஓடச் செய்தார். 
 
போலீஸாருக்கு பயந்து அந்த இளைஞர் ஓடும் இந்த வீடியோ  சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்