படிப்பு, வயது தேவையில்லை: தினமும் ரூ.2000 சம்பளத்தில் வேலை: குவியும் இளைஞர்கள்

வெள்ளி, 29 நவம்பர் 2019 (11:47 IST)
படிப்பு, வயது எதுவும் தேவையில்லை, தினமும் 2,000 ரூபாய் சம்பளம், ஒரே ஒரு மாதம் மட்டுமே ரூ.1000 கொடுத்து பயிற்சி பெற்றால் போதும் என்ற விளம்பரம் அனைத்து இளைஞர்களையும் பரவசத்தில் ஆழ்த்தி உள்ளது 
 
பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்க லட்சக்கணக்கில் செலவு செய்து விட்டு அதன் பின்னர் ஒரு சில ஆண்டுகள் வேலை கிடைக்காமல் கஷ்டப்படும் இளைஞர்கள் கோடிக்கணக்கான நம் நாட்டில் உள்ளனர். இந்த நிலையில் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணம் செலுத்தி கொடுக்கப்படும் பயிற்சி ஒன்றுக்கு, தினமும் ரூபாய் 1000 முதல் 2000 வரை சம்பாதிக்கும் வேலை கிடைக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா.. ஆம் அந்த வேலை புரோட்டா மாஸ்டர் வேலை
 
தமிழகத்தில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் பரோட்டாக்கள் அதிக அளவில் விற்பனையாவதை அடுத்து புரோட்டா மாஸ்டருக்கு டிமாண்ட் அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மதுரையை சேர்ந்த ஒருவர் பரோட்டா மாஸ்டர் பயிற்சி மையம் என்ற ஒரு மையத்தை ஆரம்பித்துள்ளார் 
 

 
இந்த மையத்தில் ஒரு மாதம் பயிற்சி பெற்றால் சாதாரண புரோட்டா முதல் சிலோன் பரோட்டா வரை அனைத்து வகையான புரோட்டா செய்வது எப்படி? என்ற பயிற்சி கொடுப்பதோடு சால்னா செய்யவும் பயிற்சி தருகிறார்கள்
 
இந்த பயிற்சியை பெற்று ரோட்டோர கடை முதல் ஸ்டார் ஓட்டல் வரை வேலைக்கு சேரலாம். புரோட்டா மாஸ்டர்களுக்கு குறைந்தபட்சம் தினமும் ரூபாய் 1000 ,ஓரளவு அனுபவம் உள்ளவர்களுக்கு ரூபாய் 2000 வரை சம்பளம் கிடைப்பதால் மாதம் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்