புஜங்களில் பெட்ரோல் ஜெல்லியை அடைத்து சிரமப்பட்ட இளைஞர்...

திங்கள், 25 நவம்பர் 2019 (17:09 IST)
ரஷிய  நாட்டில், ஒரு ராணுவவீரர் ஒருவர், பாப்பாய் என்ற  கார்டூன் கதாப்பாத்திரம் போன்று மாறுவதற்காக தனது கைகளில் ஜெல்லியை அடைந்து வைத்து தற்போது அதை அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷியா நாட்டில் வசித்து வருபவர், கிரில் தெராஷின் (வயது 23) , இவர், அங்கு பிரபலமான பாப்பாய் என்ற கதாப்பாத்திரம் போன்று தனது கைகளை மாற்ற வேண்டி புஜங்களில் பெட்ரொலியம் ஜெல்லியை அடைத்தார்.அதனால் அவர் பெரும் புகழடைந்தார்.
 
அதன்பின்னர் சில நாட்கள் கழித்து, பக்க விளைவுகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் காலம் தாழ்த்தினால் கைகளை இழக்க வேண்டுமென மருத்துவர்கள் அவரை எச்சரித்தனர்.
 
அதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கையில் இருந்த 1.36 கிலோ கிராம் சதை நீக்கப்பட்டதாக தெரிகிறது.
 
மேலும், இயற்கைக்கு எதிரான முறையில் உடல் தகவமைப்பை பெற நினைத்தால் விபரீதங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாப்பாய் என்பது கீரைகளை மட்டும் சாப்பிட்டு, புஜங்கள் மட்டும் பெரியதாக உள்ள அசுர பலம் கொண்ட கார்டூன் கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்