முன்னாள் பிரதமருக்கு கைது வாரண்ட்

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (12:10 IST)
வங்கதேச முன்னாள் பிரதமருக்கு கைது வாரண்டை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

வங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதாஜியா. இவர் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.  மேலும் ஊழல் வழக்கு விசாரணையில் ஆஜராக கலிதாஜியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் விசாரணைக்கு தொடந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து இவர் மீது 2  நீதிமன்றங்கள் கைது வாரண்டு பிறப்பித்துள்ளன.

அதைதொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களை வங்காள தேச அரசு கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. வங்காள தேசத்தில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் கலிதாஜியா மீதான நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டது என அவரது கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்