போரை சந்திக்க அமெரிக்கா தயாராக இருக்க வேண்டும்; எச்சரித்த வடகொரியா

வியாழன், 12 அக்டோபர் 2017 (16:16 IST)
கொரிய தீபகற்ப பகுதியில் போர் விமானங்களை பறக்க விட்ட அமெரிக்காவை வடகொரியா கடுமையாக எச்சரித்துள்ளது.


 

 
வடகொரியா அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இதனால் தென் கொரியா கடும் அச்சத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து போர் புரிய வடகொரியா அழைப்பு விடுத்து வருகிறது. உலக நாடுகள் ஒன்றிணைந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
 
வடகொரியாவுக்கு ஐநா சபை எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் வடகொரியா மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்கா அதிநவீன குண்டு வீச்சு போர் விமானங்களை கொரிய தீபகற்ப பகுதியில் பறக்க விட்டது.
 
இதையடுத்து ஆத்திரமடைந்த வடகொரியா நாங்கள் எங்கள் பதிலடியை போர் மூலம் அவர்களுக்கு காட்டுவோம். அமெரிக்கா  போரை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்