ட்விட்டர், மெட்டாவை தொடர்ந்து ஆட்குறைப்பில் அமேசான்? – பணியாளர்கள் நீக்கம்!

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (11:13 IST)
சமீபத்தில் ட்விட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் ஊழியர்களை குறைத்த நிலையில் அடுத்து அமேசானும் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஐ.டி துறை வளர்ச்சியால் பலரும் ஐ.டி சார்ந்த படிப்புகளை படித்து உள்நாடு, வெளிநாடுகளில் பணியில் உள்ளனர். இந்நிலையில் சமீப காலமாக புகழ்பெற்ற பெரிய நிறுவனங்கள் பொருளாதார மந்தநிலை காரணமாக பணியாளர்களை பணியை விட்டு நீக்கி வருகிறது.

சமீபத்தில் ட்விட்டரை எலான் மஸ்க் அதில் நிறைய பணியாளர்களை பணிநீக்கம் செய்தார். அதை தொடர்ந்து மெட்டா நிறுவனமும் பலரை பணி நீக்கம் செய்தது. தற்போது அமேசான் நிறுவனமும் பணி நீக்கம் செய்ய தொடங்கியுள்ளது.

சமீபத்தில் அமேசான் ரோபாட்டிக்ஸ் செயற்கை நுண்ணறிவு பிரிவில் பணியாற்றிய பலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து பெரிய நிறுவனங்கள் பணியாளர்களை அதிரடி நீக்கம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்