டெல்லியின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான பிரசாந்த் விகாரில் பிவிஆர் மல்டிப்ளெக்ஸ் அருகே, சில நிமிடங்களுக்கு முன்பு பலத்த சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று வெடித்ததாக தகவல் கிடைத்ததுடன் சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலத்த வெடிச் சத்தம் எதனால் ஏற்பட்டது என்பதை கண்டறிய தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மர்ம பொருள் வெடித்த இடத்தில் வெள்ளை நிற தூள் போன்ற பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
குண்டு வெடிப்பிற்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் தெரிகிறது. டெல்லியின் முக்கிய பகுதியில், அதுவும் பிவிஆர் மல்டிப்ளெக்ஸ் வளாகம் அருகே பலத்த சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டதால், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.