விடுதலையாகும் 6 பேர் இலங்கை சென்றால் கைது செய்யப்படுவார்களா? சட்ட ஆலோசகர்

ஞாயிறு, 13 நவம்பர் 2022 (09:59 IST)
விடுதலையாகும் 6 பேர் இலங்கை சென்றால் கைது செய்யப்படுவார்களா? சட்ட ஆலோசகர்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய 7 தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீதமுள்ள ஆறு தமிழர்களையும் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதில் ஏற்கனவே முருகன் சாந்தன் ஆகிய இருவர் விடுதலை ஆகி விட்ட நிலையில் மீதமுள்ளவர்களும் இன்று அல்லது நாளை விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் விடுதலையான முருகன் சாந்தன் ஆகிய இருவருமே தற்போது இலங்கை தமிழர் முகாமில் தங்கி இருக்கும் நிலையில் அவர்களை இலங்கை அரசு மீண்டும் ஏற்றுக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விடுதலையாகும் 6 பேர்களில் சாந்தன், ராபர்ட், ஜெயக்குமார், முருகன் ஆகிய நான்கு பேரையும் இலங்கை அரசு ஏற்குமா என்பது குறித்து இலங்கை சட்ட அதிபர் கருத்து தெரிவித்துள்ளார் 
 
இலங்கை பாஸ்போர்ட் அவர்களிடம் இருந்தால் அவர்கள் நாடு திரும்புவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு செய்து இருந்தால் அவர்கள் இலங்கை திரும்பினால் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் 
 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த 6 பேர் இலங்கை சென்றால் அங்கு கைது செய்யப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்