அட்லாண்டிக் பெருங்கடலை படகில் சுற்றிவரப் போகும் சிறுமி !

Webdunia
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (16:48 IST)
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிரேடா தன்பெர்க் என்ற 16 வயது சிறுமி ஒருவர், இம்மாதத்தில் ஐநா சபையில் நடக்கவுள்ள புவி வெப்பமயமாதல் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில் 16 வயதுடைய கிரேடா என்ற சிறுமி கலந்துகொள்ள இருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்  கடந்த ஒரு வருடமாக புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை கிரேடா ஏற்படுத்தி வரூகிறார். மேலும் இன்னும் இரு வாரத்தில் மலிசியா - 2 என்ற  ரேஸிங் யாட் வகைப் படகில் அட்லாண்டிக் கடலைக் கடக்க இருக்கிறார். 
 
இப்படகை கிரேடாவுக்கு தந்திருக்கும் போரிஸ்ஹெர்மன் இதுகுறித்து கூறியதாவது : இந்த படகு 60 அடி நீளம் கொண்டது ஆகும். இதில் சமையலறை, பிரிட்ஜ், ஏசி, ஷவர் என எந்தவொரு வசதியும்,இதில் இல்லை ஆனால் பாதுக்காப்புக்குரிய அனைத்து அம்சங்களும் இதில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். கிரேடா்வின் இம்முயற்சிக்கு அனைவரும் அவரை பாராட்டி  வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்