ஐநா. சபையின் ஊழியர்களுக்கு என்ன ஆயிற்று...?

வியாழன், 18 அக்டோபர் 2018 (13:27 IST)
ஐநா,சபையில் பணியாற்றுகின்ற ஊழியர்களின் பணிச்சுமை மற்றும் மனச்சுமை ஆகியவற்றை குறைக்க நடவடிக்கை மேகொண்டு வருவதாக ஐநா.சபையின் பொது செயலாளர் அந்தோணியா குத்ரேசு அறிவித்திருக்கிறார்.
உலகில் ஒரு நாடு மற்ற நட்டின் மேல் எடுத்த உடனே போர் தொடுக்க முடியாது. அப்படிப்போர் தொடங்கினால் இந்த உலகம் ஒரு அமைதிகாடாக இருக்காது. மாறாக சுடுகாடாக மாறிவிடும் . இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இரண்டாம் உலகப்போருக்கு பின்  பல உலக நாடுகள் இணைந்து இந்த ஐ.நா.சபையை தோற்றுவித்தனர்.
 
இந்த சபை தொடங்கப்பட்டது முதல் இப்போது வரை பல பிரச்சனைகளை தீர்த்து வைத்திருக்கின்ற அதேசமயம் உலகில் அமைதியை நிலைநாடியும் வருகிறது. 
 
ஆனால் இப்பொழுது இந்த அமைப்பில் பணிபுரிபவர்கள்  அதிக பணிச்சுமையாலும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பிடிருப்பதாகவும் அதனை நீக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்போவதாகவும் குத்ரேசு அறிவித்திருக்கிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்