சௌதி அரேபிய நாட்டு பத்திரிக்கையாளர் ஜமால் கசோதி மாயம்...

சனி, 13 அக்டோபர் 2018 (17:55 IST)
சௌதி அரேபிய நாட்டு பத்திரிக்கையாளர் ஜமால் கசோதி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார்.இது குறித்த உண்மையை தெரிவிக்குமாறு ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர்  அந்நாட்டுக்கு வலியுறுத்தியுள்ளார்.
பொதுவாக பத்திரிக்கையாளிகள் கடத்தப்படுவதும் பிணையம் வைக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
 
இதன் தொடர்சியாக சௌதி அரெபியாவில் கசொஜி மாயாமாகியுள்ளதும் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மெலும் இது போன்று பத்திரிக்கையாளர்கள் மாயமவதை தடுக்காவிட்டால் இது வழக்கமான ஒன்றாக மாறிவிடும் என்றுஐநாவின் பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.
 
சௌதி அரசின் முடியாட்சியை விமர்சித்து வந்த ஜமால் அக்டோபர் 2 ஆம் தேதி துருக்கியில் உள்ள சௌதி தூதரகத்திற்கு சென்றார்.அதன் பின் அவரை காணவில்லை என்று செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில் அவரை  கொல்ல சௌதி அரசு ஆணையிட்டதாக வெளியான செய்திகளை அந்நாட்டரசு மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்