சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

Mahendran

சனி, 5 ஏப்ரல் 2025 (09:39 IST)
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்க கோவில் இருக்கும் நிலையில், இந்த கோயிலுக்கு ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் மற்ற முக்கிய தினங்களிலும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். 
 
இந்த நிலையில், சதுரகிரி மலைக்கு செல்லும் பாதையில் உள்ள நீர் ஓடைகளில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால், பக்தர்களின் பாதுகாப்பை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. 
 
மேற்கு தொடர்ச்சி மலையில் இடைவிடாது மழை பெய்து வருவதால், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்