மோடியை பாம்புகளை வைத்து மிரட்டிய பாகிஸ்தான் பாடகி மீது வழக்கு பதிவு..

Arun Prasath
திங்கள், 16 செப்டம்பர் 2019 (13:36 IST)
பிரதமர் மோடியை முதலைகள் மற்றும் பாம்புகளை வைத்து மிரட்டிய பாகிஸ்தான் பாடகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகியான ரபி பிர்சாடா, தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் பாம்புகளை கைகளில் வைத்துகொண்டும், முதலைகளை தன் முன்னால் வைத்துகொண்டும், “நான் காஷ்மீர் பெண், இந்த பரிசுகளான பாம்புகளும் முதலைகளும் மோடிக்காக தான். காஷ்மீர் மக்களை மிகவும் துன்புறுத்துகிறீர்கள். இதற்காக இவற்றை தயாராக வைத்துள்ளேன். என் நண்பர்களாகிய இந்த பாம்புகளும் முதலைகளும் உங்களுக்கு விருந்து வைப்பார்கள்” என கூறினார். பின்பு ஒரு பாடலும் பாடினார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் நபி பிர்சாடா சட்ட விரோதமாக வன விலங்குகளை வீட்டில் வைத்திருப்பதாக  பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதி வனத்துறை, அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்