பின்லேடன் மகன் கொல்லப்பட்டார் - அமெரிக்க அதிபர் தகவல்

சனி, 14 செப்டம்பர் 2019 (20:08 IST)
செப்டம்பர் 11 - 2001 ஆம் நாளை அமெர்க்கர்கள் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு கோரதாக்குதல் நடந்த தினம் அன்று.  இந்த நாளன்று தான், சர்வதேச தீவிரவாதியான பின்லேடனின் அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், விமானத்தினால் அமெரிக்காவின் அடையாளமான டுவின் கோபுரத்தின் மீது மோதச் செய்தனர். இதில் பல்லாயிரக்கான அமெரிக்க மக்கள் பரிதாபமாக பலியாகினர்.
அன்று அல்கொய்தா தலைவனான பில்லேடனைப் பிடிக்க அமெரிக்கா ராணுவப்படை தயாரனது. இந்நிலையில் பலவருட  தேடலுக்குப் பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு, மே மாதம் 2 ஆம் தேதி, பாகிஸ்தான் நாட்டில் உள்ள அபோதாபாத்தில் ஒரு சொகுசு வீட்டில் தங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க ராணுவப் படைகள் கொன்று பழிதீர்த்தனர்.
 
இதனையடுத்து அல்கொய்தா பயங்கரவாத அமைபிற்கு தலைவனாக, பின்லேடன் மகன்  ஹம்சா பின்லேடன் வந்துள்ளதாகத் தகவல் வெளியானது. அதையடுத்து அமெரிக்காவுக்கு பல்வேறு அச்சுறுத்தல்களை அவன் ஆடியோ,வீடியோ வாயிலாக விடுத்துவந்தான். எனவே,.அவன் தலைக்கு 1 மில்லியன் டாலர்களை அமெரிக்க பரிசுத்தொகையாக அறிவித்தது.
 
இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம், 31 ஆம் தேதி, ஆப்கானிஸ்தான் -- பாகிஸ்தான் எல்லையில் நடைபெற்ற, விமான தாக்குதலில்,ஹம்சா பின்லேடன் (30)கொல்லப்பட்டதாக அமெரிக்க அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்