விமானிகள் திடீர் ஸ்டிரைக்: 800 விமானங்கள் ரத்து, 130,000 பயணிகளுக்கு பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (14:11 IST)
ஜெர்மனியைச் சேர்ந்த விமான நிறுவனமான லூப்தான்சா நிறுவனத்தின் விமானிகள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் 800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விமானிகள் வைத்திருந்த நிலையில் விமான நிர்வாகம் அந்த கோரிக்கைகளை நிராகரித்தது. இதனை அடுத்து விமானிகள் திடீரென வேலை நிறுத்தம் செய்தனர்
 
இதன் காரணமாக 800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நள்ளிரவு முதல் விடிய விடிய விமான பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன
 
ஜெர்மனியில் இருந்து டெல்லி மற்றும் இந்தியாவின் முக்கிய பகுதிகளுக்கு வரவேண்டிய விமானங்களும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்