தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

Mahendran

வியாழன், 10 ஏப்ரல் 2025 (10:24 IST)
மும்பை தாக்குதலுக்கு சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், அவர் டெல்லிக்கு வர இருப்பதாகவும், இதனைத் தொடர்ந்து டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள்  ராணாவை  அமெரிக்காவிலிருந்து தனி விமானத்தில் அழைத்து வருகின்றனர். இந்த விமானம் இன்று பிற்பகலில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், ராணாவை டெல்லியில் ஆஜர்படுத்த இருப்பதால், டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் கோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இன்னும் சில மணி நேரத்தில் ராணா டெல்லி வருவார் என எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்