கடந்த ஐந்து நாட்களில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 2000 ரூபாய் உயர்ந்துள்ளது என்பதும் ஏப்ரல் ஐந்தாம் தேதி ஒரு சவரன் 66480 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரு சவரன் 68,480விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் போலவே, வெள்ளியும் உயர்ந்து, ஒரு கிலோவுக்கு ரூ. 3000 உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 150 ரூபாய் உயர்ந்து ரூபாய் 8,560 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 1200 உயர்ந்து ரூபாய் 68,480 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 9,338 எனவும் ஒரு சவரன் ரூபாய் 74,704 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 107.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 107,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது