நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற பஸ் விபத்து- 70 பேர் படுகாயம்

Webdunia
சனி, 21 ஜனவரி 2023 (23:22 IST)
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேபாள நாட்டிற்கு ஆன்மீக சுற்றுலா சென்றனர்.

நேபாள நாட்டில் திரிவேனி என்ற பகுதியில் உள்ள மத வழிபாட்டு தலத்திற்கு சென்று இன்று மாலையில், ஆன்மிக சுற்றுலா குழுவினர்  இந்தியா திரும்பினார்.

இந்தியா- நேபாள எல்லைப் பகுதியான துஹிபெரியில் வாகனம் வந்து கொண்டிருந்தபோது, பஸ் அங்குள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில், 70 பயண்ணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நேபாள மீட்புக் குழுவினர் அவர்களை மீட்டு, மருத்துவமன்யில் அனுமதித்தனர்.

இந்த விபத்து நடந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்