வெளி நாடுகளில் சொத்து வாங்க, முதலீடு செய்ய தடை - நேபாள வங்கி உத்தரவு

சனி, 14 ஜனவரி 2023 (23:01 IST)
நேபாள நாட்டைச் சேர்ந்த மக்கள் வெளி நாடுகளில் முதலீடு செய்ய அந்த நாட்டு வங்கி தடை விதித்துள்ளது.
 

நமது அண்டை நாடான  நேபாளத்தில்   பிரதமர் புஷ்பா கமல் தஹல் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

 இந்த நிலையில்,  நேபாள நாட்டில் உள்ள  நேபாள ராஸ்ட்ரா வங்கி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,  நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள்  வெளி நாட்டில் நிலம், வீடு, கடன்பத்திரங்கள், சொத்துகள்  உள்ளிட்டவற்றை வாங்க தடை விதித்துள்ளது.

அதேபோல், வெளி நாட்டு வங்கிகள், நிதி நிறுவங்களிலும் பணத்தை  முதலீடோ, டெபாசிட் செய்ய கூடாது என்று தெரிவித்துள்ளது.

தற்போது,  நேபாள  நாட்டில் வங்கிப் பணப்புழக்கம்  நெருக்கடி நிலவுவதால்,  சொகுசுகார்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கவும் இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்