கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மானைப் பாராட்டிய ராஜமெளலி

Webdunia
வியாழன், 10 மே 2018 (12:57 IST)
‘நடிகையர் திலகம்’ படத்தைப் பார்த்தபிறகு கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மானின் நடிப்பைப் பாராட்டியுள்ளார் எஸ்.எஸ்.ராஜமெளலி. 
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நடிகையர் திலகம்’. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான இந்தப் படம், தெலுங்கில்  ‘மகாநடி’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. தமிழில் நாளை தான் ரிலீஸ் என்றாலும், தெலுங்கில் நேற்றே ரிலீஸாகிவிட்டது. இந்தப் படத்தைப் பார்த்து பலரும்  பாராட்டி வருகின்றனர்.
 
“இதுவரை நான் பார்த்ததிலேயே, சாவித்ரி அம்மாவை அப்படியே பிரதிபலித்தது போல் நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இது சாதாரண இமிட்டேஷன் கிடையாது. மிகப்பெரிய நடிகையை நம் வாழ்க்கைக்குத் திரும்ப அழைத்து வந்துள்ளார்.
துல்கர் சல்மான் உண்மையிலேயே மிகச் சிறப்பாக நடித்துள்ளார். நான் தற்போது அவருடைய ரசிகனாகி விட்டேன். நாக் அஸ்வின் மற்றும் ஸ்வப்னாவுக்கு என்னுடைய வாழ்த்துகள். உங்களுடைய நம்பிக்கை, உறுதி எல்லாமே குறிப்பிடத்தக்கது” என வாழ்த்தியுள்ளார் எஸ்.எஸ்.ராஜமெளலி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்