எஸ்வி சேகரின் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு: போலீசாரால் கைது செய்யப்படுவாரா?

Webdunia
வியாழன், 10 மே 2018 (12:55 IST)
நடிரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகரின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

 
எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் எஸ்.வி.சேகர் தலைமறைவானார்.  மேலும், முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரை கைது செய்ய தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், அவரின் முன் ஜாமீன் மனுவை ரத்து செய்தது.
 
அதனையடுத்து எஸ்.வி.சேகரை கைது செய்ய சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் வெளியானது. ஆனால், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், இன்று அவரது முன் ஜாமீன் மனுவை மீண்டும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் எஸ்.வி. சேகர் போலீஸாரால் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்