சாலை விபத்தில் சிக்கிய சிஎஸ்கே வீரரின் பெற்றோர்

புதன், 9 மே 2018 (16:23 IST)
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் மீண்டும் புத்துணர்ச்சியுடன் களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வெற்றி மேல் வெற்றியை குவித்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த அணி கண்டிப்பாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்று நம்பப்படுகிறது.
 
இந்த நிலையில் இந்த அணியின் வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூரின் பெற்றோர் இன்று சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். ஷர்துல் தாகூரின் பெற்றோர்களான நரேந்திரா தாகூர் மற்றும் ஹன்சா தாகூர் இன்று பால்கர் மாவட்டத்தில் உள்ள மாகிம் என்ற கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சாலை பராமரிப்பு பணியில் இருந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற இவர்கள் திடீரென நிலைதடுமாறி கிழே விழுந்தனர். இந்த விபத்தில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.
 
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷர்துல் தாகூரின் பெற்றோர்கள் தற்போது நலமாக இருப்பதாக ஷர்துலுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.,

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்