'காலா'வை ரிலீஸ் செய்ய கன்னட வர்த்தக சபையின் அதிர்ச்சி நிபந்தனை

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2018 (18:01 IST)
காவிரி மேலாண்மை வாரியம் வேண்டாம் என ரஜினி கூறினால் 'காலா' படத்தை ரிலீஸ் செய்வோம் என்று கன்னட வர்த்தக சபை நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. இந்த நிபந்தனை அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
'காலா' திரைப்படத்தை ரிலீஸ் செய்ய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும், 'காலா' படத்தை திரையிட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று 'காலா' படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
 
'காலா' படத்தை ரிலீஸ் செய்ய திரையரங்குகளுக்கு உத்தரவிட முடியாது என்று கூறிவிட்ட நீதிமன்றம், இருப்பினும் காலா படத்தை வெளியிடும் கர்நாடக தியேட்டர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்த நிலையில் கர்நாடகாவில் 'காலா' படத்தை திரையிட கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிக்கு நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. இதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு தெரிவித்தால் 'காலா' படத்தை வெளியிட ஒத்துழைக்கின்றோம் என்றும் அறிவித்துள்ளது. ஆனால் ரஜினி இந்த நிபந்தனையை ஏற்று கொள்ள மாட்டார் என்றே கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்