பெட்ரோல் விலைக்கு எதிர்ப்பு - 9 பைசாவை மோடிக்கு செக்காக அனுப்பிய வாலிபர்

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2018 (17:48 IST)
குறைக்கப்பட்ட பெட்ரோல் விலை 9 பைசாவை தெலுங்கானாவை சேர்ந்த ஒரு வாலிபர் பிரதமர் மோடிக்கு காசோலையாக அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
பாஜக ஆட்சியில் பெட்ரோல் மற்றும் டீசலில் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஆனால் குறைக்கப்படும் போது பைசா கணக்கில் மட்டுமே குறைக்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.80ஐ தாண்டிவிட்டது. அதேபோல், டீசலின் விலை ரூ.72 ஆக உயர்ந்து விட்டது. இதே நிலைதான் நாடு முழுவதும் நீடிக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே சமீபத்தில் பெட்ரோலின் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டது. அதன் பின் 9 பைசா குறைக்கப்பட்டது. 
 
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா மாநிலம் ராஜாண்ணா சிர்சிலாவை சேர்ந்த சாந்து என்ற வாலிபர் குறைக்கப்பட்ட 9 பைசாவை காசோலையாக மோடிக்கு அனுப்பியுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் அவர் இந்த காசோலையை ஒப்படைத்தார். மேலும், பிரதமர் மோடியை இந்த காசோலை விரைவில் அடைய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்